செவ்வாய், 12 மார்ச், 2013

DIJANGO !!

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது வென்ற குவாண்டின் டொராண்டினோ வின் ஜாங்கோ பார்த்தேன்! {dijango வில் d silent ஆம் }.! அவரது எல்லா படங்களிலும் பழி வாங்கும் மனிதனின் ஆதார உணர்ச்சியைத்தான் வன்முறை காட்சிகளின் மூலம் படம் பிடித்து காட்டுவார்! django வும் அந்தவகை படம்தான் ! 200 ஆண்டுகளுக்கு முந்தைய நீக்ரோ அடிமைகளின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு கதை பின்னியிருக்கிறார் !
Bounty Hunter எனும் தொழிலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. "தலைக்கு ஒரு விலை" நிர்ணயிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்படும் அதிமுக்கிய குற்றவாளிகளை பிடித்துக்கொண்டு போய் அதில் கிடைக்கும் சன்மானத்தில் காலத்தை ஓட்டுவதே இந்த Bounty Hunterகளின் வேலை. இப்படிப்பட்ட ஒரு கில்லர் ஹன்ட்டர்தான் Dr.Shults என்பவர். இவர் தேடும் குற்றவாளிகள் "Wanted Dead or Alive" ஆகத்தான் இருப்பார்கள்.இவர் தேடிக்கொண்டிருக்கும் முக்கியக் குற்றவாளி ஒருவனின் இருப்பிடங்கள் பற்றி "ஜாங்கோ" எனும் நீக்ரோ அடிமைக்கு தெரிந்திருப்பதாக இவர் அறிகிறார். உடனே போய் ஜாங்கோவை அவனது மாஸ்டரிடமிருந்து வயலண்டாக விடுவித்து தன்னோடு அஸிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்கிறார். 'சுதந்திர மனிதனான' Djangoவும் Schultzவும் தொடர்ந்து பல குற்றவாளிகளை வேட்டையாடுகின்றனர். வரும் வருமானத்தில் Django தன் பங்கைக்கொண்டு, சில வருடங்களுக்கு முன் வேறொருவருக்கு விற்கப்பட்ட தனது மனைவியைத் தேடிச் செல்லப் போவதாக கூறுகிறான்!
உடனே Dr.Schultzம் அவனுக்கு உதவத் தயார் என்று சம்மதிக்கிறார்! ஆனால் ஜாங்கேவின் மனைவி மாட்டிக் கொண்டிருப்பதோ கொடுமைக்கார 'கெல்வின் கேண்டி'யிடம்! (லியனார்டோ டிகாப்ரியோ..) ஜாங்கோவின் பயணம் கேண்டியைத் தாண்டி வெற்றியளிக்குமா என்பதே கதை!
படத்தில் கெல்வின் கேண்டி ஆக வில்லன் வேடத்தில் டிகார்பியோ நன்றாக நடித்து இருக்கிறார்! 'ட்ஜங்கோ..டிஜங்கோ ' தீம் சாங் அருமை !
குவாண்டின் டொராண்டினோ வின் dialogues ,blackcomedy ,சுட்டதும் தக்காளி சாஸ் ரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் எல்லாம் சேர்ந்து படத்தை ரசிக்கவைக்கிறது என்றால் மிகையில்லை

திங்கள், 21 பிப்ரவரி, 2011

அஞ்சலி ...


மலேசியா வாசுதேவன் படிய பாடல்களில் all time favorite உச்சி வகுந்தெடுத்து ..பாடல்தான். ரோசாப்பூ ரவிகைக்காரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எப்போது கேட்டாலும் அதில் உள்ள மென் சோகம் நம் மனதை கவ்விக்கொள்ளும். அதற்கு காரணம் அந்த பாடல் மட்டும் அல்ல.பாடலை பாடிய மலேசியா வாசுதேவனின் சுதி லயம்,உணர்வு .பாவம். என்பது பின்னால் புரிந்தது.அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றென்றும் காற்றில் பேரோசையாக கலந்து இருக்கும்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

நிலநடுக்கம்


சென்னையில் நேற்று இரவு ஒரு மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. நான் நிலநடுக்கத்தை அசந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் உணரவில்லை. ஆனால், இன்று காலை செய்திதாளில் நிலநடுக்கம் வந்த செய்தியை படித்தபோது என் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தேன்.

வியாழன், 9 ஜூலை, 2009

புனே...




நண்பர் பிரபனுடன் டெல்லி மற்றும் புனே சென்று வந்தேன். புனே என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சாம்ராட் சிவாஜி...!


அவரது கோட்டைக்கு சென்று பார்த்தேன். சனிவார் வாடா என்ற இடத்தில் ஒளி,ஒலி அமைப்புடன் சிவாஜி வரலாற்றை மராத்தி, மற்றும் ஆங்கிலத்தில் விளக்கி சொல்கிறார்கள். நம்ம ஊரிலும் செஞ்சி உட்பட எத்தனையோ கோட்டை இருக்கிறது. அதன் வரலாறு மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. மராத்தி அரசு செய்வதைபோல் ஒளி,ஒலி அமைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி சொல்ல தமிழ்நாடு சுற்றுலா துறை ஏற்பாடு செய்தால் உபயோகமாக இருக்கும்...!