வியாழன், 22 அக்டோபர், 2009

ஜப்பான் பிறந்த கதை!


சீனாவை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ‘நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்!’ என்று ஆசைப்பட்ட அரசன், அதற்கான வழி முறை களைக் கூறும் பொருட்டு கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் மருத்துவர்களை அரண்மனைக்கு வரவழைத்தான். அங்கு அவர்களை கைதிகள் போல நடத்திய அரசன், தான் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான வழிகளைச் சொல்ல மறுத் தால் எவரும் உயிரோடு போக முடியாது என்று எச்சரித்தான். அறிஞர்கள் இப்படி ஓர் அபாயத்தை எதிர்பார்க்கவில்லை. ‘ஆயுள் கூடுவது என்பது ஆண்டவன் கையில் அல்லவா இருக்கிறது? இந்தப் பைத்தியக்கார ராஜாவிடம் இதை எப்படிச் சொல்வது,’ என்று திணறினர். அப்போது ஒரு அறிஞர் எழுந்து ‘‘தோழர்களே! நாம் ஒரு தந்திரம் செய்வோம். ஆயுள் கூடும் அதிசய மூலிகை ஒரு தீவில் இருப்பதாகவும், அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்துதான் எடுத்து வர வேண் டும்... அப்படி ஒரு மாத காலம் தங்க வேண்டி இருப்பதால் எங்கள் குடும்பத்தாரையும் அழைத்துச் செல்ல அனுமதி தர வேண்டும் எனக் கூறுவோம். அப்படி அவன் அனுப்பி வைத்தவுடன்& எரிமலைத் தீவு ஒன்று இருக்கிறது. கொஞ்சம் கஷ்டமான பூமிதான். இருந்தாலும், நாம் முயற்சி செய்தால் நிச்சயம் அதைச் சிரமப்பட்டுச் சொர்க்கபுரியாக மாற்றி விட முடியும்!’’ என்றார். அரசனுக்கு விஷயம் சொல்லப்பட்டது. தானியம், உதவிக்குச் சில வீரர்களுடன் கப்பல் கள் மூலம் அவர்களை அனுப்பி வைத்தான். ‘‘வெறும் கையுடன் திரும்பி வந்தீர்களானால் எவரும் உயிர் தப்ப முடியாது!’’ என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தான் அரசன். பிறகு அந்த அறிஞர்கள், தங்களுடன் வந்த படை வீரர்களைக் கொன்று விட்டு, அந்த எரிமலைத் தீவை சென்றடைந்தார்கள். அங்கு நிலத்தைப் பண்படுத்தி ஒரு நாடாக ஆக்கினார்கள்! அந்த நாடுதான் ஜப்பான்! எல்லா வகையான அறிஞர்களையும், உழைப்பாளிகளையும் கொண்டிருந்ததால்தான், அதிக முன்னேற்றம் அடைந்த நாடுகளில் ஒன் றாகத் திகழ்கிறது ஜப்பான்.

ATM திருட்டை தடுப்பது எப்படி?


இது ஒரு முக்கியமான டிப்ஸ்: நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய வேண்டும். நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாக Enter செய்யுங்கள். எடுத்துகாட்டாக: உங்களுடைய PINNumber 1234 என்றால் 4321 என்று Enter செய்யுங்கள். இவ்வாறு உங்கள் PINNumber type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு மட்டுமில்லாமல் ஓசைபடாமல் போலீஸ்-க்கும் தகவல் அளித்துவிடும் . அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று. தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ஈரம் விமர்சனம்


டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ஈரம் பார்த்தேன். வழக்கமான பழிவாங்கும் பேயின் கதைதான், ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் அருமை.புதுமை.!

இறந்துபோனவர்களின் ஆத்மா தன்னை வஞ்சித்தவர்களை பழிவாங்க இன்னொருவரின் உடம்புக்குள் புகுந்து பழி வாங்கும் கதைகளை கேள்விபட்டிருப்போம். பேயிக்கு ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அது இன்னொருவரின் உடலாக இல்லாமல் அது தண்ணீராக இருந்தால் ?

சமீபத்தில் வெளியான யாவரும் நலம் படத்தில் டிவி பெட்டிக்குள் ஆவி புகுந்து விடுமே..?


போலீஸ் அதிகாரியாக வரும் ஆதி,மனைவியை சந்தேகத்தில் கொன்றுவிடும் நந்தா, ஆவியாக வந்து பழி வாங்கும் சிந்துமேனன், என அனைவரும் பாத்திரத்தை உணர்ந்து செய்து இருக்கிறர்கள்.

படத்திற்கு பலம் ஒளிப்பதிவு. மனோஜ் சர்வதேச தரத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குனர் அறிவழகன் விசுவலாக கதை சொல்லி ஜெயித்துஇருக்கிறார் . ஆரம்ப காதல் காட்சிகள்தான் சுமார் ரகம். கிஷோரின் படத்தொகுப்பு அருமை.

மொத்தத்தில் ஈரம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி.

வியாழன், 10 செப்டம்பர், 2009

லோக நாயுக்குடு [தெலுங்கு]


சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்த ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்து நடிக்க உள்ளார் டாக்டர் ராஜசேகர் .இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை சமீபத்தில் திருப்பதியில் வெளியிட்டார் டாக்டர் ராஜசேகர்.

டாக்டர் ராஜசேகரும் ,அவரது மனைவி ஜீவிதாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

லோக நாயுக்குடு என்று படத்துக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்..!
ராஜசேகர ரெட்டி உண்மையில் லோக நாயுக்குடு[உலக நாயகன்]தான். ! ஆந்திராவில் அவர் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் 178 பேர்
இறந்துவிட்டார்கள். ..!

திரிக்கப்படும் வரலாறு..!


முதல்முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர்கள் பூலிதேவனும், மருது சகோதர்களும்தான் என்று வரலாறு சொல்கிறது.ஆனால்,இதை திரித்து கூறும் விதமாக மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன்நாயர் எழுதிய நாவல் ஒன்றை அடிப்படையாகக்கொண்டு மலையாளத்தில் பழசிராஜா என்ற படம் தயாராகி விரைவில் திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் மம்மூட்டி உடன் சரத்குமாரும் நடித்திருக்கிறார். ஹரிகரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி பழசிராஜா என்பவர்தான் முதல்முதலாக வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவன் என்று சித்தரித்து உள்ளார்கள்.

இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்க படுகிறது.

ஆக,இந்த படத்தின் மூலம் முதல்முதலாக சுதந்திரம் கேட்டவன் ஒரு மலையாளி என்று இனி சரித்திரம் சொல்லப்போகிறது. ..!

வியாழன், 9 ஜூலை, 2009

புனே...




நண்பர் பிரபனுடன் டெல்லி மற்றும் புனே சென்று வந்தேன். புனே என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சாம்ராட் சிவாஜி...!


அவரது கோட்டைக்கு சென்று பார்த்தேன். சனிவார் வாடா என்ற இடத்தில் ஒளி,ஒலி அமைப்புடன் சிவாஜி வரலாற்றை மராத்தி, மற்றும் ஆங்கிலத்தில் விளக்கி சொல்கிறார்கள். நம்ம ஊரிலும் செஞ்சி உட்பட எத்தனையோ கோட்டை இருக்கிறது. அதன் வரலாறு மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. மராத்தி அரசு செய்வதைபோல் ஒளி,ஒலி அமைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி சொல்ல தமிழ்நாடு சுற்றுலா துறை ஏற்பாடு செய்தால் உபயோகமாக இருக்கும்...!

வியாழன், 2 ஜூலை, 2009

வால்மீகி...


ஆனந்த விகடன் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் வால்மீகி... படம் பார்த்து இருப்பீர்கள். அந்த படத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அந்த படம் மிகவும் சுமாரான படம் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை..!

ஆனந்த விகடனில் நான் கதை சொன்னபோது கதையை கேட்டவர் உங்கள் கதை இன்றைய டிரண்டில் இல்லை என்றார். எனக்கு கோபம் வந்தது.

ட்ரெண்டை இப்படிதான் இருக்கும் என்று முடிவு செய்ய இவர்கள் யார்..?

என்று அன்று மிகவும் விகடன் மீது கோபப்பட்டேன்.

என் கோபம் நியாயமானதே. !

வால்மீகி கதையை விகடன் தேர்வு செய்தபோது அந்த படத்தின் கதை இன்றய ட்ரெண்டில் இருந்ததா..?

ஆம் என்றால் உங்களுக்குத்தான் இன்றய trend எது என்று தெரியவில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.. வால்மீகி மூலம்..!

இனியாவது உதவி இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது அவர்களை புண்படுத்தாதீர்கள்.

தப்பான ஒரு கதையை தேர்வு செய்து விட்டு அந்த படத்திற்கு உங்கள் பத்திரிகையில் நன்றாக விமர்சனம் எழுதி , அதற்கு நாப்பதி ஒரு மார்க் போடுவது நியாயமா..?

விகடன் இனியாவது சிந்திக்க வேண்டும்..!